முருகன் திருவடியில் தண்டையும் சிலம்பும் ஒளிர்கின்றன. குராமலரையும் அத் திருவடிகள் புனைந்திருக்கின்றன. அவை அருள் மயமாக உள்ளன. அவனுடைய தடம்புயங்கள் ஆறிரண் டிலும் கடம்பமாலை புரள்கின்றது. அந்தப் பன்னிரு தோள்களும் வரிசையாக இருபக்கங்களிலும் இருக்கின்றன. அவனுடைய திருக்கை ஒன்று அபயத்தைக் காட்டுகிறது. ஒரு கை வேலைப் பற்றியிருக்கிறது. அந்த வேல் மலையை ஊடுருவப் பொருத வடிவேல்; பராக்ரமவேல்; சிவந்த நிறம் வாய்ந்த சினவடிவேல், அவனுடைய திருமுகங்கள் ஆறும் மணம் வீசுகின்றன. கண்கள் தாமரை மலரைப் போல விளங்குகின்றன.
முருகன் குருவடிவாய் வருகிறவன்; திருமால் மெச்சும் வீரம் உடையவன்; நிருதசங்கார பயங்கரன்; சேவல் கொடி உடையவன்; அமரசிகாமணி; வீரமுடைய சேவகன்; வள்ளிக்கு வாய்த்தவன்; மயிலேறிய மாணிக்கம்; சிவ குமாரன்; ஆறுமுகவன்; நம்பின வருக்கு மெய்த்துணையாக வருபவன்.
இந்தப் பாடல்களில் திருச்செங்கோடு, திருத்தணிகை, திருச்செந்தில் என்னும் மூன்று தலங்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. பதுமமலர் வாசனையையும் முத்துக்களையும் சொரியும் காட்சியைத் திருச்செங்கோட்டில் வைத்துக் காட்டுகிறார். திருத்தணிமாமலையில் வாவித் தடவயல் சூழ்ந்திருப்பதைச் சொல்கிறார். திருச்செந்தூர்க் கடல் ஒரு கோடி முத்தம் தெள்ளிக் கொழிப்பதைப் பாடுகிறார்.
திருமால் கசேந்திரன் அழைக்க முதலையைக் கொன்று அதற்கு அருள் செய்தவராக நிற்கிறார். சிவ பெருமான் கடல் மீது எழுந்த ஆலம் குடித்த பெருமானாக விளங்குகிறார்.
By:
Ki Va Jagannathan Imprint: Nilan Publishers Dimensions:
Height: 229mm,
Width: 152mm,
Spine: 7mm
Weight: 191g ISBN:9788199825840 ISBN 10: 8199825847 Pages: 136 Publication Date:01 February 2026 Audience:
General/trade
,
ELT Advanced
Format:Paperback Publisher's Status: Active