Beat the rise! Delivery fees are going up soon. INFO

Close Notification

Your cart does not contain any items

Sree Aravindha Yogi

K P Rajagopalan

$19.95

Paperback

Not in-store but you can order this
How long will it take?

QTY:

Tamil
Nilan Publishers
01 May 2026
""ஸ்ரீ அரவிந்த யோகி"" என்னும் நூலை எழுத இன்றியமையாத ஒரு தேவை உண்டு; அதுதான் கவித்துவம். அது ஸ்ரீ கு. ப. ராஜகோபாலன் அவர்களிடம் பிறவிக் குணமாகக் காணப்படுகிறது. கனிந்த, காட்சி நிறைந்த உள்ளம், தெளிந்த, எழில் பொறித்த சொல், மண்டும் சுவை, தனக்குத்தானே விளங்கும் அவ்வளவு எளிமை - இவை ஸ்ரீ கு. ப. ராஜ கோபாலன்.

இவைகளை வைத்துக் கொண்டு, அவர் சொல்வதைக் கவனிப்போம் ""ஸ்ரீ அரவிந்த யோகத்தைப் பற்றி ஒளியுடன் எழுத ஒரு சாதகனுக்குத்தான் முடியும் யோகானுபவம் ஒரு சிறிதேனும் உடையவன் தான் அந்தக் காரியத்தைச் சரியாகச் செய்ய முடியும். நான் ஸ்ரீ அரவிந்த யோகத்தைக் கலை முறையில் அறிய (அறிவிக்கவும்) முயற்சி செய்கிறேன்'' இதனால் அவருடைய நிறையும் குறையும் எவ்வளவு, எத்தகைத்து என்பதை ஒரே மூச்சில் தெளிவுபடுத்துகிறார்.

கவி முற்றி யோகி ஆகிறான் என்பதைப் பன்முறை தெரிவிக்கிறார். எனது அநுபவம் ஒரு சிறிது வேறுபாடுடைத்து. சாதாரணமாக வழங்கும் அருத்தத்தில், கவி என்பவன் எழுத்துச் சிற்பி சாயத்தைத் தீட்டும் ஒளியனைப்போல், கல்லை வெட்டி உருவாக்கும் கற் சிற்பியைப் போல். யோகியோ, வாழ்க்கைச் சிற்பி; தினே தினே, தன்னை அண்டி உள்ளவர்களின் வாழ்க்கையை உருவாக்கித் தருபவன். கவி,கலைஞன், ஓவியன், சிற்பி, சாஸ்திரக்ஞன் (நூலோன்) முதலிய யாவரும் யோகிக்கு முதலிடம் கொடுத்தாக வேண்டி யிருக்கிறது. இவர்கள் தங்கள் தங்கள் வழியில் எவ்வளவிற்கு முற்றிய போதிலும் யோகி ஆகிவிட முடியாது.

""ஸ்ரீ அரவிந்த யோகி"" என்னும் புஸ்தகத்தில் ""உத்தரபாராப் பிரசங்கத்தின்"" மொழி பெயர்ப்பு முக்கியமான அம்சம். நான் இதுவரை இந்தப் பிரசங்கத்தின் மொழிபெயர்ப்பில் இரண்டைப் பார்வை யிட்டிருக்கிறேன். அவை ஏற்கனவே வெளிவந்துள்ளன.
By:  
Imprint:   Nilan Publishers
Dimensions:   Height: 229mm,  Width: 152mm,  Spine: 4mm
Weight:   109g
ISBN:   9788168651173
ISBN 10:   8168651170
Pages:   74
Publication Date:  
Audience:   General/trade ,  ELT Advanced
Format:   Paperback
Publisher's Status:   Active

See Also