திருநாவுக்கரசர் தேவாரங்களின் கடைசித் திருமுறையாகிய ஆறாந்திருமுறையிலிருந்து எடுத்த பதின்மூன்று பாசுரங்களுக்குரிய விளக்கக் கட்டுரைகளை இந்தப் புத்தகத்திற் காணலாம். ஆறாந் திருமுறையில் 99 பதிகங்களும் 981 பாடல்களும் இருக்கின்றன. இந்தப் பதிகங்கள் யாவும் திருத்தாண்டகங்கள்.
திருத்தாண்டகம் என்பது யாப்பினாற் பெற்ற பெயர். தாண்டகம் என்பது ஒருவகைச் செய்யுளுக்குரிய பெயர். அது குறுந்தாண்டகம் என்றும்,நெடுந்தாண்டகம் என்றும் இருவகைப் படும். அறுசீர் அடிகள் நான்கு அளவொத்து முடிவது குறுந் தாண்டகம் என்றும், எண் சீரடிகள் நான்கு அளவொத்து அமைவது நெடுந்தாண்டகம் என்றும் பெயர் பெறும்.
யாப்பருங்கலக்காரிகைப்படி இவை எண்சீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தத்துள் அடங்கும். அரையடிக்குக் காய்ச்சீர் இரண்டும் மாச்சீர் இரண்டும் வந்த விருத்தங்கள் இவை. சில பாடல்கள் இந்த வரையறையினின் று மாறுபட்டும் இருக்கும். எண்சீர் விருத்தம் என்ற சட்டத்துக்குள் அடைக்க வேண்டு மென்று கருதித் திருத்தாண்டகப் பாடல்களைத் திருத்துவது முறையன்று. ஆன்றோர்கள் வாக்கை அப்படி அப்படியே வைத்துப் பாதுகாத்து, இலக்கணத்தில் அதற்கு அமைதி உண்டா என்று தேடிப் பார்த்துப் பொருத்திக்கொள்ள வேண்டும். இல்லை யெனின் அதற்கு அதுவே இலக்கணமாகக் கொள்ள வேண்டும்
""இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின்""என்பது எவ்வகை இலக்கணங்களுக்கு ஏற்புடைய விதி. பண்டை இலக்கணங்களில் ஆன்றோர் இலக்கியங்களைக் கண்டு விதிகளை வகுத்தார்கள் புலவர்கள். அந்த விதிகளில் அடங்காதவற்றுக்குப் புற நடை வகுத்தார்கள்.
By:
Ki Va Jagannathan Imprint: Nilan Publishers Dimensions:
Height: 229mm,
Width: 152mm,
Spine: 6mm
Weight: 163g ISBN:9788198881434 ISBN 10: 8198881433 Pages: 114 Publication Date:01 June 2025 Audience:
General/trade
,
ELT Advanced
Format:Paperback Publisher's Status: Active