மகாபாரதத்தின் துன்பியல் நாயகனான கர்ணனை ஆராயும் புத்தகம் இது. அடையாளச் சிக்கலில் கட்டுண்ட ஒருவன், தனக்கான அங்கீகாரத்தைப் பெற எத்தகைய இழி செயலையும் புரியத் தயங்கமாட்டான் என்பதற்கு கர்ணனின் பாத்திரமே நல்லதொரு உதாரணம். ஒருவேளை தனக்குரிய அங்கீகாரம் கிடைத்திருந்தால் கர்ணன் நீதி வழுவிய செயல்களைச் செய்திருக்க மாட்டானோ என்ற கழிவிரக்கம் அவன்மீது தோன்றாமல் இல்லை. நம் எல்லோர் மனத்திலும் நீங்கா இடம்பிடித்துள்ள கர்ணனின் பிம்பத்தை அறத்தின் வழி நின்று சீர்தூக்கிப் பார்க்கிறது இந்தப் புத்தகம். முனைவர் சடகோபன் எழுதி இருக்கும் இந்த நூல், இதுவரை நாம் அறியாத கோணத்தில் கர்ணனை அலசுகிறது. 'கொடுத்துக் கொடுத்துச் சிவந்த கைகள்' என்ற அடையாளத்தையும் தாண்டி, கர்ணன் மனத்தில் இருந்த கசப்புணர்வையும், அங்கீகாரத்தின் மீது கொண்ட வேட்கையால் அவன் வெளிப்படுத்திய வன்மத்தையும், செஞ்சோற்றுக் கடன் தீர்க்க அதர்மத்தின் பக்கம் நின்று தன்னையே இழந்ததையும் ஒரு நாணயத்தின் மறுபக்கமாக நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என்று வலியுறுத்துகிறது.
By:
K Satagopan Imprint: Swasam Publications Private Limited ISBN:9788119550869 ISBN 10: 8119550862 Pages: 154 Publication Date:28 August 2024 Audience:
General/trade
,
ELT Advanced
Format:Book Publisher's Status: Active