இந்தப் புத்தகத்தில் திருவாசகத்திலிருந்து எட்டுப் பாடல்களும் திருக்கோவையாரிலிருந்து ஒரு பாடலும் விளக்கம் பெறுகின்றன. பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை முறையில் பாடல்களை நான் விளக்கவில்லை.
முதலில் நிலைக் களத்தை அமைத்துக் கொண்டு பாடற்பகுதிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டி முடிவில் பாட்டு முழுவதையும் சொல்லும் முறையையே இந்த வரிசையில் மேற்கொண்டிருக்கிறேன். அவையில் விரிவுரை ஆற்றும் முறையில் இவை இருக்கும். பாடல்களிலுள்ள சொல்லின் பொருளை மாத்திரம் விளக்கினால் ஓரளவு தான் அவை உள்ளத்தில் பதியும். இத்தனை விரிவாகச் சொல்லிப் பாட்டைப் பிறகு சொன்னால் பாடல் முழுவதும் நன்றாகவும் தெளிவாகவும் பதியும் என்பதே என் நோக்கம். இதற்கு முன் வெளியான நூல்களைப் படித்தவர்கள், நான் கருதிய நோக்கம் கைகூடியதாகவே சொல்கிறார்கள்.
தமிழ்ப் புலவர்கள் படித்துப் பயன்பெற வேண்டும் என்ற நினைவோடு இவற்றை எழுதவில்லை. பள்ளியில் கீழ்வகுப்பில் படிக்கும் மாணவனுக்கும் விளங்க வேண்டும் என்ற எண்ணத்தால் விளக்கங்களையும் உவமைகளையும் கதைகளையும் பெய்து இவ் வரிசையை எழுதி வருகிறேன். இம் மலர்மாலை முருகன் திருவருளால் முழுதும் நிறைவேறவேண்டும்.
By:
Ki Va Jagannathan Imprint: Nilan Publishers Dimensions:
Height: 229mm,
Width: 152mm,
Spine: 5mm
Weight: 145g ISBN:9788199925366 ISBN 10: 8199925361 Pages: 100 Publication Date:01 March 2026 Audience:
General/trade
,
ELT Advanced
Format:Paperback Publisher's Status: Active