* அலுவலகத்தில் எனக்கு மட்டும் ஏன் இத்தனை பிரச்சினைகள்? * எட்டு மணி நேர ஆஃபிஸ் வேலை ஏன் நரகமாகத் தெரிகிறது? * சக பணியாளர்கள் முகத்துக்கு முன்னால் சிரிக்க சிரிக்க பேசிவிட்டு முதுகுக்குப் பின்னால் குத்தும்போதும் என்ன செய்வது? * சிதைந்திருக்கும் சக பணியாளர்களின் உறவை என்னால் சீர் செய்ய முடியுமா? * எல்லோருக்கும் பிடித்தவனாக, பிடித்தவளாக என்னால் மாற முடியுமா? மற்றவர்களையும் மாற்ற முடியுமா? இப்படி யோசிப்பவரா நீங்கள்? ஆம் என்றால், இது உங்களுக்கான புத்தகம். நம் தலைக்குள் புகுந்துகொண்டு வேறு எதையும் சிந்திக்க விடாமல் செய்யும் பிரச்சினைகளுக்கு நம் கண்ணெதிரே இருக்கும் தீர்வைக் கண்டு கொண்டால் போதும். நாம் பணி புரியும் சூழல் அழகானதாகிவிடும். தினம் தினம் நீங்கள் எதிர்கொள்ளும் பெரிய பெரிய பிரச்சினைகளுக்கு எளிய தீர்வைச் சொல்கிறார் ஆசிரியர் சாது ஸ்ரீராம்.