சுரேஷ் கண்ணன் தொடர்ச்சியாக உலக சினிமா பற்றியும் இந்திய சினிமா பற்றியும் பேசி வருபவர். சர்வதேசத் திரைப்படங்கள் நூல் வரிசையில் மூன்றாவது பாகம் இது. 2017 முதல் 2019 வரை வெளியான முக்கியமான உலகத் திரைப்படங்களை இந்த நூலில் விரிவாக அறிமுகம் செய்கிறார். இந்தக் கட்டுரைகள் 'குமுதம் தீராநதி' இதழில் தொடராக வெளிவந்தவை. சர்வதேசத் திரைப்படங்கள் நூல் வரிசையில் முதல் இரண்டு நூல்களில் உலகத் திரைப்படங்களை அறிமுகம் மட்டும் செய்த சுரேஷ் கண்ணன், இந்த நூலில் அறிமுகத்தோடு ஆழமான விமர்சனங்களையும் முன்வைக்கிறார். இத்திரைப்படங்கள் எப்படித் தற்கால வாழ்க்கையோடும் அரசியலோடும் பின்னிப் பிணைந்திருக்கின்றன என்பதையும் அலசுகிறார்.